அஜித்தின் வலிமை திரைப்படத்தின் காட்சிகள் நீளமாக உள்ளது என கூறப்பட்ட நிலையில் படத்தின் சில காட்சிகள் நீக்கப்பட்டு இன்று முதல் புதிய வெர்ஷன் வெளியாகின்றது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித் தற்போது வலிமை திரைப்படத்தில் நடித்து இருக்கின்றார். இத்திரைப்படத்தை போனிகபூர் தயாரித்துள்ளார். வினோத் இயக்கியுள்ளார் மற்றும் ஹீமா குரேஷி ஹீரோயினாக நடித்துள்ளார். அஜித்தின் திரைப்படங்கள் கடந்த இரண்டு வருடங்களாக வெளியாகாத நிலையில் நேற்று முன்தினம் வலிமை வெளியாகியது. இதனால் ரசிகர்கள் கோலாகலமாக திருவிழா போல் கொண்டாடி வருகின்றனர். இத்திரைப்படமானது ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை தந்துள்ளது. திரைப்படத்தின் செண்டிமெண்ட் சீன்கள் மற்றும் படத்தின் நீளம் செட் ஆகவில்லை என ரசிகர்கள் வருத்தப்படுகின்றனர்.
#Valimai trimmed
1st half 2mins
2nd half 10minsHindi version #ValimaiThePower 16mins trimmed
— Karthik Ravivarma (@Karthikravivarm) February 25, 2022
இந்நிலையில் திரைப்படத்தில் புதிதான மாற்றங்கள் செய்யப்பட்டு இருப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக தகவலை வெளியிட்டு இருக்கின்றது. படத்தின் நீளம் அதிகமாக இருப்பதாக கூறி வந்த நிலையில் தற்போது படத்தின் 14 நிமிட காட்சிகள் படத்திலிருந்து நீக்கப்பட்டு உள்ளது. படத்தில் இருந்து நீக்கப்பட்ட புதிய வெர்ஷன் இன்றுமுதல் திரையிடப்படுகின்றது. இதை அதிகாரப்பூர்வமாக படக்குழு வெளியிட்டிருக்கின்றது. இச்செய்திகள் ரசிகர்கள் மத்தியில் சந்தோஷத்தை ஏற்படுத்தி இருக்கின்றது. வலிமை திரைப்படத்தின் கலெக்ஷன் மற்ற படத்தின் கலெக்ஷனை முறியடித்து உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. முதல் நாளில் மட்டும் 30 கோடி வசூல் செய்திருக்கலாம் என கூறப்படுகின்றது.