Categories
சினிமா தமிழ் சினிமா

அஜித்தின் ‘வலிமை’… படத்தின் முக்கிய அறிவிப்பு… டுவிட்டரில் தெரிவித்த தயாரிப்பாளர்…!!!

நடிகர் அஜித் நடிப்பில் உருவாகி வரும் வலிமை படம் குறித்த முக்கிய அறிவிப்பை  போனிகபூர் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் அஜித் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் வலிமை. ஹெச் வினோத் இயக்கும் இந்தப் படத்தை போனி கபூர் தயாரிக்கிறார் .இந்த படத்தில் நடிகை ஹூமா குரேஷி கதாநாயகியாகவும் பிரபல தெலுங்கு நடிகர் கார்த்திகேயா வில்லனாகவும் நடிக்கின்றனர். மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார் . இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வருகிற மே 1ம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது .

இந்நிலையில் இந்த படம் குறித்த முக்கிய அறிவிப்பு ஒன்றை தயாரிப்பாளர் போனி கபூர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் வலிமை படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை ரோமியோ பிக்சர்ஸ் மற்றும் கோபுரம் சினிமாஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளார். ஏற்கனவே ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் அஜித்தின் நேர்கொண்டபார்வை படத்தின் ரிலீஸ் உரிமையை பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |