நடிகர் அஜித்தின் வலிமை படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஜூலை மாதம் ரிலீசாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது .
தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் அஜித்துக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர் . தற்போது இவர் ஹெச்.வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்து வருகிறார் . இந்த படத்தில் ஹூமா குரேஷி கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் போனி கபூர் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார் . வலிமை படத்தின் பெரும்பாலான படப்பிடிப்புகள் நிறைவடைந்து விட்டது.
இன்னும் மீதமுள்ள ஒரு சண்டைக் காட்சியை அடுத்த மாதம் படமாக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் வலிமை படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வருகிற ஜூலை மாதம் ரிலீஸாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது . மேலும் பர்ஸ்ட் லுக் போஸ்டருடன் வலிமை படத்தின் ரிலீஸ் தேதியையும் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது . இதனால் அஜித் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.