Categories
சினிமா தமிழ் சினிமா

அஜித்தின் ‘வலிமை’… ரிலீஸ் தேதி குறித்து வெளியான சூப்பர் தகவல்…!!

நடிகர் அஜித் நடிக்கும் ‘வலிமை’ படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் பிரபல நடிகர் அஜித் நடிப்பில் தற்போது தயாராகி வரும் திரைப்படம் ‘வலிமை’. இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கும் இந்த படத்தில் கதாநாயகியாக ஹூமா குரேசி நடிக்கிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார் . மேலும் தெலுங்கு நடிகர் கார்த்திகேயா இந்த படத்தில் வில்லனாக நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கொரோனாவுக்கு முன்பே ஹைதராபாத்தில் தொடங்கப்பட்டது .

Ajith Kumar's New Stills From The Sets Of Valimai Take Social Media By  Storm! - Filmibeat

பின்னர் சமீபத்தில் நடைபெற்ற படப்பிடிப்பின்போது பைக் சாகச காட்சியில் நடிகர் அஜீத்துக்கு காலில் காயம் ஏற்பட்டது. இதனால் படக்குழுவினர் சென்னை திரும்பியுள்ளனர் . இன்னும் 20 சதவீத படப்பிடிப்பு மட்டுமே பாக்கி உள்ள நிலையில் விரைவில் ஹைதராபாத்தில் மீண்டும் படப்பிடிப்பு நடக்கவிருக்கிறது. இந்நிலையில் வலிமை படத்தை மே 1ஆம் தேதி அதாவது அஜித்குமாரின் பிறந்தநாளன்று ரிலீஸ் செய்ய ஆலோசனை நடப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Categories

Tech |