நடிகர் மற்றும் பத்திரிக்கையாளர் பயில்வான் ரங்கநாதன் வலிமை திரைப்படம் குறித்து விமர்ச்சித்துள்ளார்.
தமிழ் சினிமா உலகில் நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர் பயில்வான் ரங்கநாதன். இவருக்கு பட வாய்ப்புகள் குறைந்ததால் பத்திரிக்கையாளராக உருவெடுத்தார். இவர் தற்போது தனியாக யூடியூப் சேனல் தொடங்கி நடத்தி வருகின்றார். இவர் நடிகராக இருந்ததைவிட பத்திரிக்கையாளராக மாறியபோதுதான் மிகவும் பிரபலமானார். இவர் திரைப் பிரபலங்களின் குடும்ப விஷயங்கள் மிகவும் பர்சனலான விஷயங்கள் உள்ளிட்டவற்றை எவ்வித தயக்கமுமின்றி தனது யூடியூப் சேனலில் கூறி வருகின்றார். இதனால் இவர் விமர்சனத்துக்கு உள்ளாகி உள்ளார்.
இவர் சிறிய நடிகர்கள் முதல் மிகவும் பிரபலமான உச்ச நடிகர்கள் வரை விமர்சனம் செய்து வருகின்றார். இந்நிலையில் அஜித் நடிப்பில் வலிமை படம் திரைக்கு வந்துள்ள நிலையில் இத்திரைப்படத்தை குறித்து விமர்சனம் செய்து இருக்கின்றார். அவர் கூறியுள்ளதாவது, வலிமை திரைப்படமானது ஆக்ஷனில் உலக திரைபடங்களில் மிஞ்சியுள்ளது. நடிகர் அஜித் மீண்டும் ஆக்சன் ஹீரோவாக இப்படத்தில் உருவெடுத்துள்ளார். அஜித்தின் ரசிகர்கள் எங்க தல ஆக்ஷன் தல என பெருமையாக கூறிக் கொள்ளலாம். இவ்வாறு பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளதை அஜித் ரசிகர்கள் வலைதளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.