Categories
சினிமா தமிழ் சினிமா

அஜித்தின் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸை பகிர்ந்த ‘வலிமை’ பட நடிகர்… வைரலாக்கும் ரசிகர்கள்…!!!

அஜித் தனது வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் வைத்துள்ள மெசேஜ் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித். இவர் நடிப்பில் உருவாகியுள்ள வலிமை திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸாக உள்ளது. ஹெச்.வினோத் இயக்கியுள்ள இந்த படத்தில் ஹூமா குரேஷி, கார்த்திகேயா, யோகி பாபு, விஜய் டிவி புகழ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். போனிகபூர் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்நிலையில் அஜித்தின்  வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதில் ‘ஏழை, நடுத்தர வர்க்கம், பணக்காரன் என்பது ஒரு தனிநபரின் பொருளாதார நிலையை தான் குறிக்குமே தவிர அவரின் குணாதிசயங்களை அல்ல. நல்ல மற்றும் கெட்ட மனிதர்கள் சமூகத்தின் ஒவ்வொரு துறையிலும் உள்ளனர். எனவே, ஒரு நபரின் பொருளாதார நிலையை அடிப்படையாகக் கொண்டு அவரது குணாதிசயங்களை மதிப்பிடுவதை நிறுத்துவதற்கான சிறந்த நேரம் இது. அனைவரும் விழித்துக் கொள்ளுங்கள்’ என பதிவிட்டுள்ளார். இதனை வலிமை படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ள ராஜ் ஐயப்பா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் அஜித்தின் அனுமதியுடன் தான் அவரது வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் மெசேஜை டுவிட்டரில் பகிர்ந்துள்ளதாக ராஜ் ஐயப்பா தெரிவித்துள்ளார்.

Categories

Tech |