Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“அஜித் சாரை கிண்டல் செய்வதற்கு நீ யாரு?…” ப்ளூ சட்டையை எச்சரித்த பிரபல நடிகர்…!!!

அஜித்தை விமர்சித்த ப்ளூ சட்டை மாறனுக்கு எச்சரிக்கை விடுத்த பிரபல நடிகர்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் வலிமை. இத்திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தாலும் கலவையான விமர்சனங்களை பெற்று இருக்கின்றது. பல விமர்சகர்களும் விமர்சித்து வரும் நிலையில் ப்ளூ சட்டை மாறன் கடுமையாக விமர்சித்துள்ளார். ப்ளூ சட்டை அவரின் எல்லையை மீறி உருவத்தை கேலி செய்து விமர்சித்திருக்கிறார். இதனால் ரசிகர்கள், திரைப் பிரபலங்கள் உள்ளிட்ட பலருக்கும் இவரின் மேல் கோபம் எழுந்துள்ளது.

இந்நிலையில் ப்ளூ சட்டை மாறன் விமர்சனத்திற்கு அஜித்தின் தீவிர ரசிகரான நடிகர் மற்றும் தயாரிப்பாளரான ஆர்.கே.சுரேஷ் எச்சரித்துள்ளார். இவர் பட நிகழ்ச்சியில் ஒன்றில் பங்கேற்ற போது கூறியுள்ளதாவது, “படத்தை பார்த்து பலரும் விமர்சிப்பார்கள். ஆனால் ஒருவரின் உருவத்தை கேலி செய்து விமர்சித்து பணம் சம்பாதிப்பது சரியே கிடையாது. அஜித் சாரை கிண்டல் செய்வதற்கு நீ யாரு? ஒரு படத்தை எடுப்பது என்பது சாதாரண விஷயம் இல்லை. அதில் எத்தனை பேரின் உழைப்பு உள்ளது. படத்தை விமர்சிக்கும் பெயரில் அந்த படத்தையே தோல்வி ஆக்கி விடுகின்றீர்கள்” என ஆக்ரோஷமாக பேசி அரங்கையே அதிர வைத்துள்ளார்.

Categories

Tech |