நடிகர் அஜித்குமார் நடிப்பில் டிரைக்டர் எச்.வினோத் இயக்கத்தில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் படம் “துணிவு”. பொங்கலையொட்டி பிரம்மாண்டமாக வெளியாக இருக்கும் துணிவு படத்துடன் விஜய்யின் வாரிசு திரைப்படமும் வெளியாகவுள்ளது. இதற்கிடையில் துணிவு படத்தின் ரீலிஸ் தொடர்பான அறிவிப்பை அடுத்து வேறு எந்தவொரு அப்டேட்டும் வராமல் இருந்தது.
https://twitter.com/GhibranOfficial/status/1590702641025150976?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1590702641025150976%7Ctwgr%5E705652ba37f38cebdf5b2ccb12d18746f53d9612%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fcineulagam.com%2Farticle%2Fghibran-about-thunivu-movie-output-1668088675
இந்த நிலையில் துணிவு படத்தின் இசையமைப்பாளர் ஜிப்ரான் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறார். அதாவது டிரைக்டர் எச்.வினோத் உடன் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவிட்டு, அதில் “எனது இயக்குனரின் பரபரப்பான ஷெட்யூலுக்குப் பின் ஒரு இசை விவாதம் மற்றும் எனது புன்னகையே படத்தைப் பற்றிய அனைத்தையும் சொல்லிவிடும்” என பதிவிட்டு இருக்கிறார்.