Categories
சினிமா தமிழ் சினிமா

அஜித் நடிக்கும் “துணிவு” படத்தின் முதல் பாடல் குறித்து…. படக்குழு வெளியிட்ட தகவல்…. குஷியில் ரசிகர்கள்….!!!!

தற்போது நடிகர் அஜித் எச்.வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் “துணிவு” படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அஜித்தின் தோற்ற போஸ்டர் அண்மையில் வெளியாகி வைரலானது. இப்படம் வங்கி கொள்ளையை மையமாக கொண்டு தயாராவதாக முன்பே கூறப்பட்டது. இத்திரைபடத்தில் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் போன்றோர் முக்கியமான கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இந்த படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் பெற்று உள்ளது. வருகிற  பொங்கலுக்கு இந்த படம் வெளியாகவுள்ளது. இந்த நிலையில் “துணிவு” படத்தின் புது அப்டேட்  வெளியாகி இருக்கிறது. அதாவது, இப்படத்தின் முதல் பாடலான “சில்லா சிலா” பாடல் வரும் டிச..9 ஆம் தேதி வெளியாக உள்ளது. இதை படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்து உள்ளது. இந்த அறிவிப்பால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருக்கின்றனர்.

Categories

Tech |