Categories
சினிமா தமிழ் சினிமா

அஜித் நடிக்கும் “துணிவு”…. வெளியான புது அப்டேட்…. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்….!!!!

ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் “துணிவு’. இப்படம் வங்கி கொள்ளையை மையமாக கொண்டு தயாராவதாக ஏற்கனவே கூறப்பட்ட நிலையில், உண்மை கதையில் அஜித் நடித்து வருவதாக தகவல் வெளியாகியது. இவற்றில் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் போன்றோர் முக்கியமான கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இத்திரைப்படம் வருகிற பொங்கலுக்கு வெளியாக உள்ளதாக தகவல் கூறுகிறது. இந்த படத்தின் “சில்லா சில்லா” பாடல் கடந்த 9ம் தேதி வெளியாகி வரவேற்பை பெற்றது. இந்நிலையில் துணிவு திரைப்படம் பற்றிய புது தகவலை இயக்குனர் ஹெச்.வினோத் ஒரு பேட்டியில் தெரிவித்து உள்ளார். அதாவது இத்திரைப்படத்தில் அஜித் லுக்கில், சின்ன ஒரு முன்னோட்டத்தினை பார்த்ததற்கே ரசிகர்கள் குஷி அடைந்தனர். இதையடுத்து நாங்கள் வெளியிடவுள்ள புரொமோக்களை பார்த்தால், ரசிகர்கள் என்ன செய்வார்கள் என புரியவில்லை என்று தெரிவித்து உள்ளார். இதன் காரணமாக படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது.

Categories

Tech |