அஜித் “வலிமை” திரைப்படத்திற்கு தொடர்ந்து ஆதரவு அளித்துவரும் விஜய் ரசிகர்களை போனிகபூர் பாராட்டியுள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித் தற்போது வலிமை திரைப்படத்தில் நடித்து இருக்கின்றார். இத்திரைப்படத்தை போனிகபூர் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளார். H.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவான ‘நேர்கொண்டபார்வை’ திரைப்படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார். இந்நிலையில் H.வினோத், அஜித், போனி கபூர் இவர்களின் இரண்டாவது கூட்டணி “வலிமை” திரைப்படமாகும். வலிமை திரைப்படமானது மூன்று வருடங்களாக உருவாகிக் கொண்டிருந்த நிலையில் தற்பொழுது வருகின்ற பிப்ரவரி 24ஆம் தேதி ரிலீஸாக உள்ளது.
இந்நிலையில் இப்படத்தின் பிரமோஷனுக்காக போனி கபூர் தீவிர பணியில் இறங்கியுள்ளார். இதனைத் தொடர்ந்து வலிமை திரைப் படத்தின் பிரமோஷனுக்காக தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த போனிகபூரிடம் விஜய் ரசிகர்கள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு போனி கபூர், விஜய் ரசிகர்கள் விஜய்க்கு மிகவும் விசுவாசமானவர்கள் என கூறியிருந்தார். அஜித் திரைப்பட தயாரிப்பாளர் விஜய் ரசிகர்களை பாராட்டியது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.