அஜித்தின் பிறந்த நாளை முன்னிட்டு நாளை வெளியாகியிருக்கும் தகவலால் ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கிறார்கள்.
தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருகின்றார் அஜித். இவர் நடிப்பில் வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் அண்மையில் வெளியான திரைப்படம் வலிமை. இத்திரைப்படம் வசூல் அளவில் நல்ல வரவேற்பை பெற்றாலும் ரசிகர்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. இத்திரைப்படத்தை தொடர்ந்து அஜித், வினோத், போனிகபூர் கூட்டணி ஏகே 61 திரைப்படத்திலும் தொடர்கின்றது. இதையடுத்து ஏகே 62 திரைப் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பானது சமீபத்தில் வெளியானது. இத்திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க விக்னேஷ் சிவன் இயக்கி இருக்கின்றார். மேலும் அனிருத் இசையமைக்கவுள்ளார்.
இந்நிலையில் அஜித்தின் ஏகே 63 படம் குறித்த தகவல் வெளியாகி சமூக வளைதளத்தில் வைரலாகி வருகிறது. இப்படத்தை சிறுத்தை சிவா தயாரிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. இந்நிலையில் நாளை அஜித்தின் பிறந்த நாளையொட்டி அவரின் திரைப்படங்களின் அப்டேட் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்நிலையில் ஏகே 61 படத்தின் டைடில் லுக் மற்றும் ஏகே 63 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என செய்தி வெளியாகி இருக்கின்றது. இதனால் ரசிகர்கள் சந்தோஷத்தில் இருக்கிறார்கள்.