Categories
சினிமா தமிழ் சினிமா

அஜித் ரசிகர்களுக்கு… மாஸ் அப்டேட் கொடுத்த இயக்குனர்..!!

வினோத் இயக்கத்தில் அஜித் நடிகராக நடிக்கும் படம் வலிமை. இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகி இதுவரையிலும் எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.

கடந்த சில மாதங்களாக அஜித் ரசிகர்கள் சம்பந்தமில்லாமல்  பிரதமர் மோடியிடம், சென்னையில் நடந்த டெஸ்ட் போட்டியில் என்று பலரிடம் வலிமை படத்தின் அப்டேட் கேட்டது சர்ச்சையானது. அதனால் மனமுடைந்த அஜித் தல கடைசியாக ஒரு அறிக்கையை வெளியிட்டார். படத்தின் படப்பிடிப்பு இன்னும் பத்து பதினைந்து நாட்கள் மட்டும்தான் நடக்க உள்ளது. நடத்தி முடித்து விட்டால் மொத்த படப்பிடிப்பும் முடிந்து விடும் என்று கூறியிருந்தார்.

ரசிகர்களின் தொடர்ச்சியான தொந்தரவை அடுத்து விரைவில் படத்தின் அப்டேட் ஒன்றை இயக்குனர் எஸ் வினோத் வழங்கியுள்ளார். வலிமை படத்தின் மோஷன் போஸ்டர் ரெடி ஆகி விட்டதாக கூறியுள்ளார். போஸ்டரை பார்த்து அஜித் அருமையாக இருப்பதாக இயக்குனரை பாராட்டியுள்ளார்.

Categories

Tech |