எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள வலிமை திரைப்படம் நாளை வெளியாக உள்ளது. இந்த நிலையில் “இலவச டிக்கெட்” சலுகையை தென்னிந்திய பன்மாநில கூட்டுறவு அங்காடி மையம் அறிவித்துள்ளது.
வேலூரில் இயங்கும் தென்னிந்திய பன்மாநில கூட்டுறவு அங்காடி மையத்தில் (SIMCO CO-OPERATIVE) 2,999 ரூபாய்க்கு மேல் மளிகை பொருட்கள் வாங்கினால் வலிமை படத்திற்கான டிக்கெட் இலவசம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.