Categories
சினிமா தமிழ் சினிமா

அஜித், விஜய்யில் யார் நம்பர் 1…? நடிகை திரிஷா சொன்ன பதில்…. என்ன தெரியுமா…???

தமிழ் சினிமாவில் ரஜினி கமலுக்கு அடுத்தபடியாக விஜய், அஜித்தை தான் ரசிகர்கள் பார்க்கின்றார்கள். இந்த இரண்டு நடிகர்களின் ரசிகர்களுக்கும் இடையே மோதல் ஏற்படுவது இயல்பான ஒன்று. தற்போது பொங்கலுக்கு வாரிசு மற்றும் துணிவு திரைப்படம் வெளியாவதால் அதிகமான மோதல் ஏற்பட்டு வருகின்றது. இதனிடையே வாரிசு திரைப்பட தயாரிப்பாளர் தில் ராஜு விஜய் தான் நம்பர் ஒன் ஹீரோ என கூறியது அஜித் ரசிகர்களிடையே மேலும் சலசலப்பை ஏற்படுத்தியது. இதனால் தற்போது சோசியல் மீடியாவில் யார் நம்பர் ஒன் நடிகர் என்பது ஹாட் டாபிக்காக இருக்கின்றது.

இந்த நிலையில் அஜித், விஜய்யில் யார் நம்பர் 1 என்ற கேள்விக்கு நடிகை த்ரிஷா பதிலளித்துள்ளார். இதுகுறித்து, இருவரில் ஒருவரை தேர்வு செய்ய முடியாது. கடைசியாக வெளியான படம் ஹிட் ஆனால் நீங்கள் நம்பர் 1. ரிலீஸ் ஏதும் இல்லையெனில் அந்த இடத்தில் வேறொருவர் இருப்பார். அவர்கள் இருவருமே சூப்பர் ஸ்டார்கள்தான். அதில் எப்படி ஒருவரை நம்பர் 1 என்று என்னால் எப்படி சொல்ல முடியும். எண் விளையாட்டில் எனக்கு நம்பிக்கை இல்லை என்றார்.

Categories

Tech |