தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக வலம் வரும் வெங்கட் பிரபு சென்னை 28, கோவா, மங்காத்தா போன்ற பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கியுள்ளார். இவர் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான மாநாடு திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று பாக்ஸ் ஆபிஸில் 100 கோடி ரூபாய் வரை வசூல் சாதனை புரிந்தது. இந்த படத்தில் நடிகர் சிம்பு ஹீரோவாக நடித்திருந்தார். அதன் பிறகு இயக்குனர் வெங்கட் பிரபு தற்போது தெலுங்கு சினிமாவில் நாக சைதன்யாவை வைத்து என்சிசி22 என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்நிலையில் இயக்குனர் வெங்கட் பிரபு சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அவரை சந்திக்கும் போதெல்லாம் ரசிகர்கள் கேட்கும் ஒரே கேள்வி அஜித், விஜயை வைத்து எப்போது படம் எடுக்கப் போகிறீர்கள் என்பதுதான்.
அந்த வகையில் தான் தற்போது நடந்த நிகழ்ச்சியிலும் அஜித், விஜய் இணையும் படம் எப்போது என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு இயக்குனர் வெங்கட் பிரபு கூறியதாவது, எனக்கும் அவர்கள் 2 பேரையும் திரையில் ஒன்றாக காட்ட வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. அவர்கள் 2 பேரும் ஒன்றாக இருக்கும்போதே நான் கூறியிருக்கிறேன். அவர்களுக்கும் இணைந்து படம் பண்ணுவதில் விருப்பம் தான். அது எப்போது நிறைவேறும் என்பதற்காக தான் நான் காத்திருக்கிறேன். நடிகர் அஜித்தும், விஜய்யும் ஒப்புக் கொண்டால் மங்காத்தா 2 படம் கண்டிப்பாக எடுத்து விடலாம் என்று கூறியிருக்கிறார். மேலும் இயக்குனர் வெங்கட் பிரபுவின் புதிய தகவலால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கின்றனர்.