நடிகர் அஜித்தை விமர்சித்த ப்ளூ சட்டை மாறனுக்கு வார்னிங் கொடுத்துள்ளார் புலி ராகவேந்திரன்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித் நடிப்பில் வலிமை திரைப்படம் பிப்ரவரி 24 இல் வெளியாகியது. அஜித்தின் திரைப்படங்கள் இரண்டு வருடங்களாக வெளியாகாத நிலையில் தற்போது வெளியாகியதை ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாடினர். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். கதாநாயகியாக ஹீமா குரேஷி நடித்துள்ளார். இத் திரைப்படமானது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று பாக்ஸ் ஆபிஸில் இடம்பெற்றுள்ளது.
https://www.instagram.com/p/CaqufCTPb4C/?utm_source=ig_web_button_share_sheet
இத்திரைப்படத்தை இயக்குனர் மற்றும் விமர்சகரான ப்ளூ சட்டை மாறன் விமர்சித்துள்ளார். அவர் கூறியதாவது அஜித்துக்கு முகத்தில் தொப்பை ஏற்பட்டிருப்பதாக மரியாதைக் குறைவாக விமர்சித்துள்ளார். இவரது விமர்சனத்துக்கு அரசியல் மற்றும் சினிமா பிரபலங்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வந்தனர். இருப்பினும் ப்ளூ சட்டை தான் கூறியது சரிதான் என அடுத்தடுத்து விமர்சித்து பதிவிட்டு வந்தார். இந்நிலையில் சீரியல் நடிகர் ராகவேந்திரன் புலி ப்ளூ சட்டையை பந்தாடியுள்ளார்.அவர் இன்ஸ்டாவில் கூறியுள்ளதாவது, “ப்ளூ சட்டை மாறன் மீண்டும் வலிமை ரிவ்யூ… என்னங்க சொன்னிங்க அஜித் சார?? மூஞ்சி தொப்பை விழுந்து இருக்கா????… உங்க மூஞ்சிக்கு நான் கேரண்டி இல்ல… யூ வில் சி வாட் இஸ் ஷார்ட் டெம்பர்… என்று வெறியாக பதிவிட்டுள்ளார் புலி ராகவேந்திரன்.