அஜித் மற்றும் ஷாலினி இந்த தம்பதியினருக்கு மூன்று முறை கல்யாணம் ஆகி உள்ளது.
நடிகர் அஜித் மற்றும் ஷாலினியை அனைவரும் அறிந்திருப்பர். இவர்கள் “அமர்களம்” திரைப்படத்தில் நடிக்கும் பொழுது இருவரும் காதலித்து 2000-ஆம் வருடம் இரு வீட்டு சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார்கள். வேறு வேறு மதத்தைச் சார்ந்த இவர்கள், திருமணத்தை மூன்று முறை செய்து கொண்டார்கள். அஜித்தின் தந்தை கேரளாவைச் சேர்ந்த தமிழர், அம்மா குஜராத்தி, ஷாலினி கிறிஸ்தவ மதத்தைச் சார்ந்தவர். ஆகையால் இவர்கள் குஜராத் முறைப்படியும் கிறிஸ்தவ முறைப்படியும் இஸ்லாமிய முறைப்படியும் திருமணம் செய்து கொண்டார்கள். இவர்களுக்கு திருமணமாகி 20 வருடங்கள் ஆகிறது.
தற்போது இந்த தம்பதியினருக்கு அனுஷ்கா மற்றும் ஆத்விக் என்ற இரு குழந்தைகள் உள்ளன. இவர்கள் எப்பொழுதும் காதல் மாறாமல் ஒற்றுமையாக உள்ளார்கள். ஆனால் இப்பொழுது உள்ள நடிகைகள் திருமணத்திற்குப் பிறகும் நடிக்கிறார்கள். நடிப்பிற்கு திருமணம் தடையாக இருப்பின் விவாகரத்து செய்துவிட்டு நடிப்பை தொடர்கிறார்கள். இப்படிப்பட்டவர்களுக்கு மத்தியில் ஷாலினி மிகப்பெரிய முன்னணி நடிகையாக இருந்தும் தன் காதலுக்காக திருமணத்துக்குப் பிறகு நடிப்பை விட்டு குடும்ப வாழ்க்கையில் கவனம் செலுத்தினார். இவர்கள் அனைவருக்கும் ஒரு நல்ல எடுத்துக்காட்டாக அஜித்-ஷாலினி இருப்பார்கள்.