அஜித் ஷாலினியுடன் இருக்கும் பரிசனல் புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ள நிலையில் ரசிகர்களால் பல கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான அஜித் எப்போதும் தனது தனிப்பட்ட வாழ்க்கை, தொழில், குடும்ப உறுப்பினர்கள் சம்பந்தப்பட்ட எந்த ஒரு தகவலும் வெளியே வரக்கூடாது என்பதில் உறுதியாக இருப்பார். இந்நிலையில் இவரும் இவரது மனைவி ஷாலினியும் பார்ட்டியில் நெருக்கமாக இருக்கும் போட்டோ வெளியாகி இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றது. இதை அஜித்தின் மச்சினிச்சி ஷாமிலி தான் வெளியிட்டுள்ளார். அதில் 23 years of togetherness என்று கேப்சன் செய்துள்ளார்.
அஜித் தனக்கு என்று ஒரு பிம்பத்தை உருவாக்கி உள்ள நிலையில் சாமிலி போட்டோவை பகிர்ந்து அஜித்தின் இமேஜை உடைத்து இருக்கின்றார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்களும் போட்டோ அஜித்தின் அனுமதியுடன் பகிரப்பட்டதா? மற்றொரு பக்கம் கண்டிப்பாக அஜித்தின் அனுமதி இல்லாமல் தான் பகிரப்பட்டு இருக்கும் எனவும் கூறி வருகின்றனர். கணவன்-மனைவி பர்சனல் போட்டோவை இணையத்தில் பகிரலாமே என சாமிலியை இணையதளவாசிகள் விளாசி வருகின்றனர்.