நடிகர் அஜித் படத்தை அடுத்து நடிக்க உள்ள 61-வது படத்தை எச். வினோத் இயக்குகிறார். போனி கபூர் தயாரிக்கும் இந்த திரைப்படம் இன்று பூஜையுடன் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்டுமன்றி படத்தில் பணியாற்றும் தொழில்நுட்ப குழுவினரின் பட்டியல் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. அதில் ஒளிப்பதிவு – நிரவ்ஷா, இசை -ஜிப்ரான், எடிட்டர்-விஜய் வேலு சுட்டி, ஸ்டண்ட் -சுப்ரீம் சுந்தர், திலீப் சுப்பராயன் மற்றும் பல்வேறு பணிகளுக்கான பெயர்களும் இடம் பெற்றுள்ளன. இன்று படப்பிடிப்பு தொடங்க உள்ள நிலையில் நடிகர் அஜீத் ரசிகர்கள் அனைவரும் குஷியில் உள்ளனர்.
Categories