Categories
லைப் ஸ்டைல்

அஜீரணத்திற்கு புதினா ஜூஸ் குடிங்க….. இதை விட சிறந்தது வேறு எதுவுமில்லை….!!!

நம் அன்றாட வாழ்வில் உணவு என்பது மிகவும் இன்றியமையாதது. அவ்வாறு நாம் தினமும் எடுத்துக்கொள்ளும் உணவுகள் உடலுக்கு ஆரோக்கியம் தரும் அதிக அளவு சத்துக்கள் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். அதிலும் குறிப்பாக காய்கறிகள், கீரைகள் மற்றும் பழங்களை உணவில் சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது. ஏனென்றால் அதில் இயற்கையாகவே அதிக அளவு சத்துக்கள் நிறைந்துள்ளன. ஆனால் சிலருக்கு அடிக்கடி அஜீரண கோளாறு ஏற்படுவதை மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளது. அதற்கு எளிய வீட்டு மருத்துவம் நீங்களே செய்யலாம்.

அஜீரணத்திற்கு சிறந்தது புதினா மட்டுமே. புதினாவில் பைட்டோ சத்துக்கள், மென்தால் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் உள்ளது. இவை வலியை குறைக்கும் ஆற்றல் கொண்டது. புதினா ஜூஸ் குடித்தால் அஜீரணம், வயிற்றில் ஏற்படும் தொற்று ஆகியவை குணமாகிவிடும். இது சிறந்த கிருமி நாசினி. புதினா வயிற்றுவலி, வாயு தொல்லை, மலச்சிக்கல், உப்புசம் மற்றும் வயிற்றுப்போக்கு உள்ளிட்ட பல வயிற்றுக் கோளாறுகளையும் தீர்த்து விடுகிறது.

Categories

Tech |