Categories
டெக்னாலஜி பல்சுவை

அஞ்சல் அலுவலக சேமிப்பு கணக்கில்… குறைந்தபட்சம் இந்தத் தொகை கட்டாயம்… அஞ்சல் துறை அறிவிப்பு..!!

அஞ்சல் அலுவலகத்தில் சேமிப்பு கணக்கில் குறைந்தபட்சம் 500 இருப்பு வைத்து இருக்க வேண்டும் என்பது தற்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய விதி டிசம்பர் 12 முதல் அமலுக்கு வரும். இந்தியா போஸ்ட்டை பொறுத்தவரை இப்போது சேமிப்பு கணக்கில் குறைந்தது ரூபாய் 500 வைத்திருக்கவேண்டும். இதுதொடர்பாக இந்திய தபால் அலுவலகம் தனது ட்விட்டர் பக்கத்தில் “தபால் அலுவலக சேமிப்பு கணக்கில் குறைந்தபட்ச நிலுவைத் தொகையை வைத்திருப்பது இப்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

பராமரிப்பு கட்டணத்தை தவிர்ப்பதற்காக 11.12.2020க்குள் தபால் அலுவலக சேமிப்பு கணக்கில் குறைந்தது 500 ரூபாயை டெபாசிட் செய்யவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே குறைந்தபட்ச நிலுவைத் தொகை 500 ரூபாயை டிசம்பர் 11-ம் தேதிக்குள் உங்கள் கணக்கில் டெபாசிட் செய்து விடுங்கள்.

Categories

Tech |