இந்திய தபால் துறை வங்கிகளுக்கு இணையாக மக்களுக்கு பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. இதில் முக்கிய பலன் வட்டி விகிதம் அதிகமாக உள்ளது. இதனால் சேமிப்பு திட்டங்கள் செய்பவர்களுக்கு சேமிப்பு தொகையுடன் கூடுதல் வட்டி கிடைப்பதால் சேமிப்பு திட்டங்களில் மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். கிராமப்புறங்களில் உள்ள அதிக மக்கள் அஞ்சலக திட்டங்களில் அதிகம் சேமித்து வருகின்றனர். காப்பீடு திட்டங்கள், வருங்கால வைப்பு நிதித் திட்டங்கள் மற்றும் மாதாந்திர வருமானம் திட்டங்கள் ஆகிய திட்டங்கள் எதிர்கால சேமிப்புக்கு உத்தரவாதத்தை அளிக்கிறது. ஒவ்வொருவருக்கும் தனித்தனி விதிமுறைகள் மற்றும் கால அளவும் உள்ளது.
அதன்படி Gram Suraksha என்ற சேமிப்பு திட்டத்தில் அதிகமான லாபத்தையும், குறைந்த ஆபத்தையும் பெற்றிருப்பதால் நடுத்தர மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறது. இதில் 19 வயது முதல் 55 வயது உள்ளவர்கள் இந்தத் திட்டத்தில் இணைந்து கொள்ளலாம். மேலும் இந்தத் திட்டத்தில் sum insured அளவு 10,000 ரூபாய் முதல் அதிகபட்சமாக 10 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்து கொள்ளலாம். அது மட்டுமல்லாமல் மாதம், காலாண்டு, அரையாண்டு அல்லது ஓராண்டு என்று பிரீமியம் தொகையை செலுத்தி கொள்ளலாம்.
இந்நிலையில் 19 வயது உள்ளவர்கள் 10 லட்சம் ரூபாய் என்ற sum insured தேர்வு செய்தால் 55 வயது வரை மாதம்தோறும் 1,515 ரூபாய் செலுத்த வேண்டும். அவ்வாறு செலுத்தினால் 55 வயது முடியும்போது 31.60 லட்சம் ரூபாய் கிடைக்கிறது. இதனை இன்னும் 5 ஆண்டுகள் நீட்டித்தால் 60 வயதில் 34.60 லட்சம் ரூபாய் பெற முடியும். மேலும் இந்த திட்டம் சிறு முதலீட்டாளர்களுக்கு அதிக அளவு பலன் தர கூடியதாக உள்ளது. எனவே சிறு முதலீட்டாளர்கள் மற்றும் நடுத்தர மக்கள் அதிக அளவில் இந்த திட்டத்தில் பயன் பெற்று வருகின்றனர்.