Categories
உலக செய்திகள்

அஞ்சல் பெட்டியில் பன்றி இறைச்சி…. அம்மாவின் உயிருக்கு உத்திரவாதம் இல்லை…. புகார் அளித்த மகன்…. வழக்கை ஏற்க மறுத்த அதிகாரிகள்…!!!

மர்மநபர்கள் பன்றி இறைச்சியை இஸ்லாமிய குடியிருப்பின் முன்பு வீசிய சம்பவத்திற்கு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்ய மறுத்துள்ளனர்.

சுவிட்சர்லாந்த் நாட்டின் சூரிச் மாகாணத்தில் துருக்கிய குடும்பம் ஒன்று வசித்து வந்துள்ளனர். சம்பவத்தன்று, அவர்களின் குடியிருப்பு பகுதியில் உள்ள அஞ்சல் பெட்டியில் மர்ம நபர்கள் பன்றி இறைச்சியை வைத்து திணித்து விட்டு மாயமாகியுள்ளனர். உடனே இதுகுறித்து 31 வயதுடைய நபர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இதனைத் தொடர்ந்து அதிகாரி ஒருவர் வந்து விசாரணை மேற்கொண்டதில், புகார் அளித்த நபர் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் அல்ல என்பதால் வழக்கு பதிவு செய்ய மறுத்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து அந்த நபர் கூறுகையில், “இந்த வழக்கு தொடர்பாக காவல்துறையினர் விசாரிப்பார்கள் என்று நம்புகிறேன். தற்போது நடந்துள்ள சம்பவம் எனக்கு அதிர்ச்சியையும், கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. சூரிச் சமூகம் பல தடவை தங்களை ஏமாற்றியுள்ளது. மேலும் இது போன்று கிழிந்த உடை, காலணிகள், நாய்களின் கழிவு போன்றவற்றையும் மர்ம நபர்கள் வீசியுள்ளனர்” என்று கூறியுள்ளார்.

இவ்வாறான செயல் விளையாட்டு கிடையாது, திட்டமிட்ட சதி ஆகும். இது போன்று நாளை என் அம்மா வெளியில் செல்லும் போது இவர்கள் தாக்குதல் நடத்த மாட்டார்கள் என்பதற்கு என்ன சாத்தியம் என்று கேள்வி கேட்டுள்ளார். இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |