Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

அடகடவுளே இப்படியா பண்ணுவீங்க…. கணவர் செய்ய முயன்ற பயங்கரம்…. பெண்ணுக்கு தீவிர சிகிச்சை….!!

பணம் தராததால் மனைவியை மண்ணெண்ணெய் ஊற்றி எரிக்க முயன்ற கணவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் டவுன் வ.நகர் பகுதியில் சாகுல் அமீது என்பவர் வசித்த் வருகின்றார். பெயிண்டரான இவருக்கு பாத்திமா பீபி என்ற மனைவி உள்ளார். இவர் நாமகிரிபேட்டையில் உள்ள சத்துணவு மையத்தில் ஆசிரியராக பணிபுரிந்து வரும் நிலையில் சாகுல் அமீது அடிக்கடி பணம் கேட்டு பாத்திமா பீபியை தொல்லை செய்து வந்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்படுவது வழக்கம்.

இதேபோல் சம்பவத்தன்று கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த சாகுல் அமீது வீட்டில் இருந்த மண்ணெண்ணையை பாத்திமா பீபி மீது ஊற்றி தீ வைத்து கொலை செய்ய முயன்றுள்ளார். இதனையடுத்து பாத்திமாவின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர் தீக்காயமடைந்த பாத்திமா பீபியை மீட்டு ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

தற்போது அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தகவலறிந்த ராசிபுரம் காவல்துறையினர் விசாரணை நடத்தி மனைவியை கொலை செய்ய முயன்ற சாகுல் அமீதை கைது செய்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |