Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

அடகடவுளே….!! திடீரென அறுந்து விழுந்த உயிர் அழுத்த மின்கம்பி…. 3 மணி நேரம் பாதிக்கப்பட்ட ரயில் சேவை….!!!!!

திடீரென மின்கம்பி அறுந்து விழுந்ததால் 3 மணி நேரம் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருவாலங்காடு-மோசூர் ரயில் நிலையங்களுக்கு இடையே தினம்தோறும் ஏராளமான ரயில்கள் செல்வது வழக்கம். இந்நிலையில் நேற்று மதியம் திடீரென எக்ஸ்பிரஸ் ரயில்கள் செல்லும் வழித்தடத்தில் உயர் அழுத்த மின்கம்பி அறிந்து விழுந்தது. இதனால் அவ்வழியாக வந்த சென்னை-கோயமுத்தூர் இன்டர்சிட்டி, சென்னை-திருவனந்தபுரம், சென்னை-பெங்களூரு உள்ளிட்ட பல ரயில்கள்  நிறுத்தப்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த உயர் அதிகாரிகள் மற்றும் பழுது பார்க்க ஊழியர்கள் சுமார் 3 மணி நேரம் போராடி அருந்து விழுந்த மின் கம்பியை சரி செய்துள்ளனர். அதன் பின்னர் ரயில்கள் அங்கிருந்து சென்றுள்ளது. இதனால் பயணிகள் குறிப்பிட்ட நேரத்தில் தாங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு செல்ல முடியாமல் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.

Categories

Tech |