Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அடகு கடையில் துப்பாக்கியுடன் நுழைந்த கொள்ளையர்கள் …சாதுர்யமாக செயல்பட்ட அடகுக் கடைக்காரர்…!!

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அருகே  அடகு கடையில் துப்பாக்கியுடன் நுழைந்து கொள்ளையடிக்க முயன்ற கும்பலை  சி.சி.டிவி காட்சிகள் அடிப்படையில் போலீசார் தேடி வருகின்றனர்.

நெல்சன் என்பவர் அடகு கடை நடத்தி வருகிறார் நேற்றிரவு கைக்குட்டையால் முகத்தை மறைத்தபடி அங்கு சென்ற 3 பேர் கொண்ட கும்பல் துப்பாக்கியை காண்பித்து மிரட்டி கொள்ளையடிக்க முயன்றனர்.இதனைப் பார்த்து சாதுர்யமாக செயல்பட்ட அடகுக் கடைக்காரர் பாதுகாப்பு ஒலிபெருக்கியை இயக்கியதால் ஒலிபெருக்கி சத்தம் எழுப்பியதை கேட்ட கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர். அவர்கள் வைத்திருந்தது உண்மை துப்பாக்கியா  அல்லது போலி துப்பாக்கியா என விசாரணை நடத்திவரும் காவல்துறையினர் கொள்ளை கும்பலை தேடிவருகின்றனர் .

Categories

Tech |