முதியவரிடம் 74 ஆயிரம் ரூபாய் பணத்தை திருடி சென்ற வாலிபரை போலீசரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள காரப்பட்டு கிராமத்தில் விவசாயியான முருகையா என்பவர் வசித்து வருகிறார். இவர் வங்கியில் அடகு வைத்த நகைகளை திருப்புவதற்காக 1 லட்சத்து 38 ஆயிரம் ரூபாயை வைத்துள்ளார். அதில் 64 ஆயிரம் ரூபாய்க்கு அடகு வைத்த நகைகளை திருப்பிவிட்டு, மீதி உள்ள 74 ஆயிரம் ரூபாயை மஞ்ச பையில் வைத்துக்கொண்டு திருச்சி ரோட்டில் இருக்கும் கடை முன்பு நின்று கொண்டிருந்த சிலரிடம் பேசியுள்ளார். அப்போது மோட்டார் சைக்கிளில் அந்த வாலிபர்கள் சில ரூபாய் நோட்டுகள் கீழே கிடப்பதாக முருகையாவிடம் கூறியுள்ளனர். அவர் அது என்னுடைய பணமில்லை என கூறியுள்ளார்.
இதனை அடுத்து முருகையா சற்றும் எதிர்பாராத நேரத்தில் அந்த வாலிபர்கள் பணப்பையை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி செல்ல முயன்றனர். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் ஒரு வாலிபரை மட்டும் பிடித்து கீரனூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதனை அடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் அந்த வாலிபர் கணக்கம்பாளையம் பகுதியைச் சேர்ந்த ராமு(26) என்பது தெரியவந்தது. மேலும் தப்பி ஓடிய நபர் ராகவன் என்பது தெரியவந்தது. இது குறித்து வழக்கு பதிந்த போலீசார் ராமுவை கைது செய்தனர். மேலும் பணத்துடன் தலைமறைவான ராகவனை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.