Categories
சேலம் மாவட்ட செய்திகள்

அடகொடுமையே…! காட்டுக்குள் பிரசவம் பார்த்த கணவர்….. அநியாயமாக பறிபோன 2 உயிர்கள்….!!!!

சேலம் சீலநாயக்கன்பட்டி குறிஞ்சி நகரை சேர்ந்தவர் பூபதி. இவருடைய மனைவி பார்வதி. இவர்களுக்கு கஜேந்திரன் (3), பூமிகா (2) என்ற 2 குழந்தைகள் உள்ளனர். இதனிடையே மீண்டும் பார்வதி, 8 மாத கர்ப்பிணியாக இருந்தார். பார்வதி மீண்டும் கர்ப்பமடைந்தது உறவினர்களுக்கு தெரிந்தால், தவறாக நினைப்பார்கள் என எண்ணிய இவர்கள், யாருக்கும் தெரியாமல் பார்த்துக் கொண்டனர்.

இந்நிலையில், 8 மாத கர்ப்பிணியான பார்வதிக்கு, திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதனால் காட்டுக்குள் அழைத்து சென்று பூபதியே பார்வதிக்கு பிரசவம் பார்த்துள்ளார். இதில், அவருக்கு குழந்தை இறந்து பிறந்தால் அங்கயே குழிதோண்டி புதைத்துள்ளார். இதனிடையே, பார்வதிக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டு சிறிது நேரத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். அவ்வழியாக சென்றவர்கள் அளித்த தகவலின் பேரில், மல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்துவருகிறார்கள்.

Categories

Tech |