Categories
தேசிய செய்திகள்

அடகொடுமையே!… சாப்பாட்டால் வந்த வினை…. 10 ரூபாயால் பறிபோன உயிர்…. பரபரப்பு….!!!!!

உத்தரபிரதேச மாநிலம் சோன்பாரா மாவட்டம் டொரியா கிராமத்தில் அவினாஷ் குப்தா (16) என்பவர் வசித்து வருகிறார். இவர் தெருவோர சிற்றுண்டி உணவகம் நடத்தி வருகிறார். இந்த நிலையில் நேற்று சிற்றுண்டி உணவகத்திற்கு வந்த அதே கிராமத்தை சேர்ந்த தினேஷ் 10 ரூபாய்க்கு சாட்மசாலா என்ற உணவை சாப்பிட்டுள்ளார். இதையடுத்து தினேஷ் இதற்கான பணம் 10 ரூபாயை பின் தருவதாக கடை உரிமையாளர் அவினாஷிடம் கூறியுள்ளார்.

அதன்பின் சிறிது நேரத்திற்கு பின்  தினேஷ் மற்றொரு நண்பருடன் அவினாஷ் நடத்தி வரும் சிற்றுண்டி உணவகத்திற்கு வந்துள்ளார். அதனை தொடர்ந்து தன் நண்பருக்கு சாட்மசாலா சிற்றுண்டி வழங்குமாறு கடை உரிமையாளரிடம் தினேஷ் கேட்டுள்ளார். அப்போது ஏற்கனவே ரூபாய் 10 பாக்கி இருப்பதால் முதலில் அந்த பணத்தை தரும்படி தினேஷிடம் கடை உரிமையாளர் அவினாஷ் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக கடை உரிமையாளருக்கும், வாடிக்கையாளருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது. இதற்கிடையில் வாக்குவாதம் முற்றியதால் கடை உரிமையாளர் அவினாஷை, வாடிக்கையாளர் தினேஷ் இரும்பு கம்பியால் தாக்கினார். இத்தாக்குதலில் பலத்த காயமடைந்த அவினாஷ் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தினேஷை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Categories

Tech |