திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே வசிக்கும் தம்பதிகள் ரசாக்- ரெஜினா .இவர்களுக்கு ஒன்றரை வயதில் அஜ்மீர் என்ற குழந்தை இருந்தது. இந்த நிலையில் இந்த குழந்தை விளையாடி கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக குளிப்பதற்காக வைத்திருந்த வெந்நீர் பாத்திரத்திற்குள் தவறி விழுந்து உள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் படுகாயம் அடைந்த குழந்தையை மேல் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
ஆனால் சிகிச்சை பலனின்றி குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. பெற்றோர்கள் இதுபோன்று கவனக்குறைவால் தங்களுடைய குழந்தைகளை இழக்கும் சூழ்நிலை உருவாகிறது. எனவே எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்.