Categories
தேசிய செய்திகள்

அடக்கடவுளே… அசுத்தமான தண்ணீர் குடித்ததால் 86 பேர் உடல் நலம் பாதிப்பு… சிறுவன் பலி… பெரும் அதிர்ச்சி சம்பவம் …!!!!!

ராஜஸ்தானின் கரவுலி மாவட்டத்தில் டிசம்பர் 3-ம் தேதி படபடா, கசைபடா, ஷாகஞ்ச் மற்றும் பயானியா போன்ற பகுதிகளை சேர்ந்த 86 பேர் அசுத்தமான தண்ணீரை குடித்ததால் வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கால் அவதிப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து முதன்மை தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் புஷ்பேந்தர் குப்தா கூறியதாவது, செவ்வாய்க்கிழமை மாலை வரை மொத்தம் 86 பேர் அசுத்தமான தண்ணீர் குடித்ததால் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களின் 54 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ள நிலையில் 32 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் குழந்தைகள் வார்டில் 48 பேர் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். இதில் ஷாகஞ்சில் வசித்து வந்த 12 வயது சிறுவன் தேவகுமார் என்பவர் திங்கள்கிழமை இரவு வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்டு செவ்வாய்க்கிழமை காலை மருத்துவமனைக்கு வந்தபோது உயிரிழந்துள்ளார் என தெரிவித்துள்ளார்.

Categories

Tech |