Categories
உலக செய்திகள்

அடக்கடவுளே….! அடுத்தடுத்து சிதைந்த உக்ரேன்…. “முதல் நாள் போர் வெற்றிகரமானது”…. ரஷ்யா அதிரடி…!!

உக்ரேனின் 74 ராணுவ கட்டமைப்புகள் செயலிழக்க செய்யப்பட்டுள்ளதாக அந்நாடு தெரிவித்த சில மணி நேரங்களுக்கு பிறகு முதல் நாள் போர் வெற்றிகரமானது என்று ரஷ்யா தெரிவித்துள்ளது.

உக்ரைன், ரஷ்யா நாடுகளுக்கிடையே கிரீமியா தொடர்பாக பல ஆண்டுகளாக எல்லை பிரச்சினை நீடித்து வந்துள்ளது. இதனையடுத்து உக்ரேன் நோட்டா அமைப்பில் சேர நினைத்துள்ளது. ஆனால் இதற்கு ரஷ்யா உக்ரேனை மிக கடுமையாக எச்சரித்துள்ளது. இவ்வாறு இருக்க ரஷ்யா உக்ரைன் எல்லையில் ஒரு லட்சத்துக்கு மேலான தங்களது படைகளை குவித்துள்ளது. இதற்காக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பலமுறை ரஷ்யா எச்சரித்துள்ளது. இருப்பினும் ரஷ்யா தங்களுக்கு உக்ரேன் மீது போர் தொடுப்பதற்கான எந்த எண்ணமும் இல்லை என்று கூறி வந்துள்ளது.

ஆனால் உக்ரைனிலுள்ள டுனெட்ஸ் மற்றும் லுகன்ஸ் பகுதிகளை தனி நாடுகளாக ரஷ்ய அங்கீகரித்து அங்கு தனது படைகளை குவித்துள்ளது. இதனை சாதகமாக பயன்படுத்திய ரஷ்யா அதிரடியாக நேற்று உக்ரேன் மீது போரை பிரகடனப்படுத்தியுள்ளது. அதுமட்டுமின்றி இந்தப் போரில் எந்த நாடாவது தலையிட நினைத்தால் அந்நாடு வரலாற்றில் சந்தித்ததை விட பெரிய விளைவுகளை பார்க்க நேரிடும் என்றும் அதிபர் புதின் எச்சரித்துள்ளார். அதன்பின்பு ரஷ்யா உக்ரைனிலுள்ள ராணுவ நிலையங்கள், விமான தளங்கள் உட்பட பல பகுதிகளில் குண்டு மழை பொழிந்துள்ளது. இந்த தாக்குதலில் 74 ராணுவ கட்டமைப்புகள் செயலிழக்க செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து நேற்று ஒரே நாளில் மட்டும் ரஷ்யா தங்கள் நாட்டின் மீது 200க்கும் மேற்பட்ட தாக்குதலை நடத்தியுள்ளது என்று உக்ரேன் எல்லை பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளார். இந்த அதி பயங்கர தாக்குதலில் சிக்கி அப்பாவி பொதுமக்கள் உட்பட 68 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக உக்ரேன் அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள். இந்நிலையில் உக்ரைன் தங்கள் நாட்டின் மீதான ரஷ்யாவின் தாக்குதலில் 74 ராணுவ கட்டமைப்புகள் செயலிழக்க செய்யப்பட்டுள்ளதாக அறிவித்த சில மணி நேரங்களுக்குப் பிறகு அந்நாடு அதிரடியான தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது உக்ரேன் மீதான “முதல் நாள் போர் வெற்றிகரமானது” என்று தெரிவித்துள்ளது.

Categories

Tech |