தமிழக முழுவதும் சென்னை உள்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என்று மொத்தமாக 649 நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. அதன்படி தமிழகத்தில் உள்ள மொத்தம் 12,838 வார்டுகளுக்கு ஒரே கட்டமாக இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது. இதில் அனைவரும் ஆர்வத்துடன் சென்று வாக்கு செலுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் பெரம்பலூர் ரோவர் பள்ளி வாக்குச் சாவடியில் அதிமுக மற்றும் தேமுதிகவினர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். பிற அரசியல் கட்சி பிரமுகர்கள் 5 பேருக்கு மேல் இருப்பதாக அதிமுகவினரும், மாற்றுத்திறனாளிகளை அரசியல் கட்சியினர் அழைத்து வரக்கூடாது என தேமுதிகவினரும் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.