நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுகிறார்.இவர் ஐயா படத்தின் மூலமாக அறிமுகமாகி பல்வேறு படங்களில் நடித்து டாப் 1 நடிகையாக உள்ளார். நயன்தாராவின் ‘கனெக்ட்’ படம் வரும் 22ல் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில், நயன்தாரா பேட்டியில் படவிழாக்களில் பங்கேற்க மறுப்பது குறித்து நடிகை நயன்தாரா விளக்கமளித்துள்ளார்.
அதில், நான் ஆரம்பத்தில் நடித்த படங்கள் பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதையம்சம் இல்லாத படங்களாக இருந்தன. பாடல் வெளியீட்டு விழாக்களுக்கு சென்றாலும் நடிகைக்கு மரியாதை இருக்காது. அதனால் பட விழாக்களுக்கு செல்வதை தவிர்த்தேன். இப்போது பெண்களை மையப்படுத்தும் நிறைய படங்கள் வருகின்றன என்று நயன்தாரா மனம் திறந்துள்ளார்.