ஷோரூம் ஒன்றில் சிம்கார்டு வாங்க சென்ற மலையாள நடிகை அன்னா ரேஷ்மாவை அறையில் வைத்து பூட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரபல நடிகை ஒருவர் தனது சிம்கார்டு தொலைந்து விட்டதை அடுத்து புதிய சிம் கார்டு வாங்க தனியார் தொலைத்தொடர்பு அலுவலகம் சென்றுள்ளார். அப்பொழுது அங்குள்ள ஊழியர் ஒருவர் அந்த நடிகையை ஒரு அருகில் வைத்து பூட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. “அங்கமாலி டைரீஸ்” என்ற திரைப்படத்தின் மூலம் மலையாள திரையுலகில் அறிமுகமானவர் தான் நடிகை அன்னா ரேஷ்மா ராஜன். இவர் “அய்யப்பனும் கோஷியும்” உள்பட பல படங்களில் நடித்துள்ளார். தற்போது இவர் மூன்று மலையாள படங்களில் நடித்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நடிகை அன்னா ரேஷ்மா கடந்த சில நாட்களுக்கு முன்னர் தமது சிம்கார்டு தொலைத்து போனதை அடுத்து புதிய சிம்கார்டு வாங்க தனியார் தொலைதொடர்பு நிறுவனத்தின் அலுவலகத்திற்கு சென்றுள்ளார். அப்பொழுது அங்கு அவர் தன்னை நடிகை என்று காட்டிக் கொள்ளாமல் ஊழியர்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளித்துள்ளார். ஒரு கட்டத்தில் ஊழியர்கள் கேட்ட கேள்வியால் ஆத்திரமடைந்த அன்னா ரேஷ்மா வாக்குவாதம் நடத்தியுள்ளார். இதனை அடுத்து அங்குள்ள ஊழியர்கள் அவர் நடிகை என்று தெரியாமல் அவரை ஒரு அறைக்குள் தள்ளி விட்டு பூட்டி வைத்துள்ளனர். இதனைத் தொடர்ந்து அவர் அழுது கொண்டே தனக்கே வேண்டியவர்களை தொடர்பு கொண்டு நடந்ததை தெரிவித்துள்ளார்.
இது குறித்து தகவல் அறிந்து அங்கு வந்த காவல் துறையினர் உடனடியாக சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு வந்து சிறை வைக்கப்பட்டிருந்த ரேஷ்மாவை மீட்டுள்ளனர். அதன் பிறகு தான் அவர் நடிகை என்றும் தொலைத்தொடர்பு ஊழியர்களுக்கு தெரிய வந்துள்ளது. மேலும் அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் நடிகையிடம் மன்னிப்பு கேட்டு தயவு செய்து இந்த விஷயத்தை பெரியதாக்க வேண்டாம் என்று கூறியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து ரேஷ்மா கூறியதாவது, “ஒருவருக்கு வேலை கிடைப்பது கடினம் என்பதால் அந்த ஊழியர்களை மன்னித்துவிட்டேன். இங்கே ஒன்றே சொல்லிக் கொள்கிறேன். வாடிக்கையாளர்கள் யாராக இருந்தாலும் ஊழியர்கள் அவர்களிடம் கண்ணியமாகவும், கட்டுப்பாட்டுடனும் நடந்து கொள்ள வேண்டும். இதனை ஊழியர்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்” என்று அவர் கூறியுள்ளார். மேலும் இந்த சம்பவம் மலையாளத் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.