கனடாவில் ஒன்றாறியோவின் விண்ட்ஸ்டரில் உள்ள பள்ளி ஒன்றில் 34 வயது ஆசிரியர் ஒருவர் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. மேலும் கடந்த டிசம்பர் மாதத்தில் இது தொடர்பான விசாரணை நடத்தப்பட்டது. அந்த சமயம் அவரிடம் படித்த 5 மாணவிகள் காவல் நிலையத்தில் வரிசையாக புகார் கொடுத்தனர். அந்த புகாரில் ஆசிரியர் தங்கள் மீது தவறாக கை வைத்து அத்து மீறியதாக குறிப்பிட்டிருந்தனர்.
மேலும் புகார் அளித்த அனைவருமே 18 வயதிற்கு கீழானவர்கள் என்ற நிலையில் காவல்துறையினர் தங்களது விசாரணையை மேற்கொண்டனர். இதையடுத்து அந்த ஆசிரியரை சில தினங்களுக்கு முன்பு காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் அவர் மீது சுமார் 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.