ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றிய நிலையில் அங்கு ஒரு சில நாட்களில் தலிபான்கள் ஆட்சி அமைக்க உள்ளனர். இதனால் அவர்களின் கொடுமையான ஆட்சிக்கு பயந்த அந்த நாட்டு மக்கள் வேறு நாடுகளுக்கு தப்பித்து சென்று விடலாம் என்று விமானங்களில் ஏறுவதற்கு கூட்டம் கூட்டமாக கூடி வருகின்றனர். இது குறித்து வெளியாகி வீடியோவெளியாகி உலக நாடுகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
பல நாடுகளும் ஆப்கான் மக்கள் குறித்து கவலை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் வசிக்கும் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் மிகவும் அச்சம் அடைந்துள்ளனர் என்று இந்தியா வேதனை தெரிவித்துள்ளது. ஆப்கானில் உள்ள தூதரக ஊழியர்கள் உட்பட அனைவரின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும். பயங்கரவாதிகள் பிற நாடுகளை அச்சுறுத்த ஆப்கானை பயன்படுத்தவில்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.