Categories
மாநில செய்திகள்

அடக்கடவுளே… “ஆம்புலன்ஸில் ஸ்ட்ரக்சர் இல்லாமல் சிறுவனை தள்ளு வண்டியில் அழைத்து சென்ற அவல நிலை”… பெரும் பரபரப்பு…!!!!!

ஆம்புலன்ஸில் ஸ்ட்ரக்சர் இல்லாமல் சிறுவனை தள்ளு வண்டியில் இழுத்து சென்ற வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஹவுராவில் இருந்து புதுச்சேரிக்கு சனிக்கிழமை தோறும் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு கொண்டிருக்கிறது. அந்த வகையில் நேற்று ரயில் ஹவுராவில் இருந்து புதுவைக்கு வந்து கொண்டிருந்தபோது கொல்கத்தாவில் சேர்ந்த ஒரே குடும்பத்தினர் ஐந்து பேர் பயணம் மேற்கொண்டுள்ளனர். சரியாக அந்த ரயில் புதுச்சேரி அருகே வந்த போது அவர்களின் 15 வயது சிறுவன் ஒருவனுக்கு திடீரென உடல் நல குறைவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் அந்த ரயில் புதுச்சேரி ரயில் நிலையத்தை அடைந்தவுடன் அவர்கள் சிறுவனை மருத்துவமனையில் அனுமதிப்பதற்காக ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

அந்த தகவலின் பெயரில் ஆம்புலன்ஸ் விரைந்து ரயில் நிலையத்துக்கு வந்துள்ளது ஆனால் அந்த ஆம்புலன்ஸில் உள்ள ஸ்ட்ரக்சர் சேதமடைந்திருப்பதால் நடைமேடைக்கு இழுத்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.  இதனை அடுத்து உடனடியாக சிறுவனின் பெற்றோர்கள் அங்கிருந்த பார்சல் ஏற்ற செல்லும் தள்ளு வண்டியில் சிறுவனை படுக்க வைத்து தள்ளிக் கொண்டு ரயில் நிலையத்திற்கு வெளியே அழைத்து சென்றனர். அதன்பின் அவரை புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர் பொதுவாக ஆம்புலன்ஸ் என்றால் முதலுதவி சிகிச்சை உபகரணங்கள் அனைத்தும் இருக்க வேண்டும்.

ஆனால் புதுச்சேரி சுகாதார நிலையத்திற்கு சொந்தமான ஆம்புலன்ஸில் எந்த ஒரு அடிப்படை வசதியும் இல்லாதது பெரும் அதிர்சியை ஏற்படுத்தியுள்ளது. இது பற்றி ஆம்புலன்ஸ் டிரைவர் பேசும்போது ஆம்புலன்ஸில் இருந்த ஸ்ட்ரக்சர் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு சேதம் அடைந்துள்ளது. இது பற்றி பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை அதன் காரணமாக அவசர நேரத்தில் நோயாளிகளை ஆம்புலன்ஸில் ஏற்றுவதற்கு மிகவும் சிரமம் ஏற்படுகிறது. புதிய ஸ்ட்ரக்சர் வாங்குவதற்கு 8 முதல் 10 ஆயிரம் வரை செலவாகும் அதனால் இது பற்றி விரைந்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.

Categories

Tech |