பிரேசிலின் அதிபரை கடந்த 2018 ஆம் ஆண்டு நடந்த பிரச்சாரத்தின் போது மர்ம நபர் கத்தியை கொண்டு தாக்கிய நிலையில் தற்போது அவர் குடல் அடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பிரேசில் நாட்டின் அதிபரான ஜெயிர் போல்சனரோவை கடந்த 2018ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது மர்ம நபர் ஒருவர் கத்தியைக் கொண்டு தாக்கியுள்ளார்.
அதிலிருந்தே பிரேசில் நாட்டின் அதிபரான ஜெயிருக்கு 4 முறை வயிற்றில் அறுவை சிகிச்சை செய்யும்படியான சூழல் உருவாகியுள்ளது.
இந்நிலையில் ஜெயிர் தற்போது மீண்டும் குடல் அடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதனையடுத்து பிரேசில் நாட்டின் அதிபரின் உடல் நிலை குறித்து தற்போது வரை எவரும் எந்த தகவலும் தெரிவிக்கவில்லை.