இன்றைய காலகட்டத்தில் பெற்றோர்கள் பார்த்து முடிக்கும் திருமணங்களை விட காதல் திருமணங்கள் தான் அதிகரித்து வருகிறது. ஆனால் இந்த காதல் திருமணங்களுக்கு ஜாதி, மதம் ஆகியவற்றை வைத்து ஒரு சில பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால் காதல் ஜோடிகள் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொள்ளும் நிலைமை ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் இவர்களுக்கு உதவி செய்யும் விதமாக ஹரியான மாநிலத்தில் வீட்டை விட்டு வெளியேறி ஓடிப்போய் திருமணம் செய்து கொள்ளும் காதல் ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைக்க ஒருவர் கடை ஒன்றை ஆரம்பித்துள்ளார்.
ஹரியானா மாநிலம் பஞ்குலா பகுதியில் இந்த கடை உள்ளது. காதல் திருமணம் செய்ய விரும்பும் காதல் ஜோடிகள் இந்த கடைக்கு சென்று அவர்களுக்கான விருப்பத்தை சொல்லும் பட்சத்தில் திருமண ஆடை முதல் வக்கீல் செலவு வரை அனைத்துமே செய்து கொடுக்கப்படுகிறது. ரூ.5100 முதல் 16 ஆயிரம் வரை தங்களின் விருப்பத்திற்கு ஏற்ப பேக்கேஜ்கள் இருக்கிறது. இது அனைத்தும் இரண்டு நாட்கள் ஏற்பாடு செய்யப்படுகிறது.
இந்த கடையில் தற்போது வரை 80 திருமணங்கள் வரை நடைபெற்றுள்ளது. காதல் ஜோடிகளின் வீட்டில் கடும் எதிர்ப்பு இருக்கும் பட்சத்தில் கோர்ட்டில் ஆஜராகி பாதுகாப்பு பெற்றுத் தருவதும் இந்த கடைக்காரர்கள் உதவுகிறார்களாம். காதல் ஜோடிகளுக்கு இந்த மாதிரியான கடைகள் ஆரம்பிக்கப்பட்டு உதவி செய்தலும், பெற்றோர்களின் சம்மதத்தோடு காதலிப்பவர்களை திருமணம் முடிப்பது நல்லது.