ஷாங்காய் நகரத்தில் கொரோனா நோய் தொற்றினால் உணவுப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் பொது மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளார்.
சீன நாட்டில் ஷாங்காய் என்ற நகரம் அமைந்துள்ளது. இந்த நகரத்தில் கொரோனா நோய் தொற்றினால் விதிக்கப்பட்டுள்ள கடும் விதிமுறைகளுக்கு மத்தியில் உணவுப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் பொது மக்களின் அன்றாட இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து நகராட்சி அதிகாரிகள் விநியோகித்த உணவுப் பொருட்கள் தரமற்றதாக இருப்பதால் அதை சாப்பிட்ட சிலருக்கு சில மணி நேரத்தில் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை தொடர்ந்து சீனாவில் புதிதாக 360 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் அதில் 261 பேர் ஷாங்காய் நகரத்தை சேர்ந்தவர்கள் என்று அந்நாட்டின் தேசிய சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது.