Categories
தேசிய செய்திகள்

அடக்கடவுளே! இதுதான் தள்ளுபடியா….? பவர் பேங்க் ஆர்டர் செய்த நபருக்கு காத்திருந்த அதிர்ச்சி….!!!!

இந்தியாவில் மிகப்பெரிய ஆன்லைன் ஷாப்பிங் தளமாக அமேசான் நிறுவனம் இருக்கிறது. அமேசான் நிறுவனத்தில் தற்போது கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் சேல் விற்பனை தொடங்கியுள்ளது. இந்த பண்டிகை கால விற்பனையை முன்னிட்டு பல்வேறு விதமான பொருட்களுக்கு அசத்தல் ஆஃபர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தள்ளுபடியில்  பல்வேறு விதமான பொதுமக்களும் அமேசான் நிறுவனத்தில் பொருட்களை வாங்குவதற்கு ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இந்நிலையில் அமேசான் நிறுவனத்தில் இருந்து ஒருவர் ரெட்மி பவர் பேங்க்-ஐ ஆர்டர் செய்துள்ளார். இது நேற்று அவருக்கு டெலிவரி செய்யப்பட்டுள்ளது. அந்த பார்சலை ஆர்வத்துடன் பிரித்து பார்த்த  நபருக்கு மாபெரும் அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது பேக்கேஜில் பவர் பேங்குக்கு பதிலாக சலவை சோப் இருந்துள்ளது. மேலும் தள்ளுபடி விலையில் வாடிக்கையாளர்கள் ஆர்டர் பண்ணும் பொருளை அனுப்பாமல் மாற்றுப் பொருளை அனுப்புவதாக குற்றசாட்டுகள் எழும் நிலையில் அது 2-வது முறையாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |