ஈரானில் தொடர்ந்து பெய்யும் கனமழையால் ஏற்பட்ட பெருவெள்ளம் மற்றும் நில சரிவில் சிக்கி 69 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஈரான் நாட்டில் தெஹ்ரான் என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதி உள்ளிட்ட 20 மாகாணங்களில் கடந்த 2 வாரங்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகின்றது. இதனால் பல்வேறு நகரங்கள் மற்றும் கிராமங்களில் மழை வெள்ளத்தினால் சூழ்ந்து பல இடங்களில் நிலச்சரிவுகளும் ஏற்பட்டுள்ளன. இந்த மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி 69 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 45 பேர் காணவில்லை. தெஹ்ரானின் வடக்கு பகுதிகளில் இன்னும் பல இடங்கள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. இங்கு சிக்கியுள்ள மக்களை மீட்கும் பணியில் பேரிடர் மீட்பு படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இது குறித்து ஈரான் அதிபர் இப்ராகிம் ரெய்சி கூறியதாவது, “மந்திரிகள் மற்றும் கவர்னர்களுக்கு வெள்ளப்பெருக்கால் ஏற்படும் பாதிப்புகளை குறைப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க தயாராகும்படி கூறியுள்ளார். இருப்பினும் பல மாகாணங்களில் மழை தொடரும் என அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதனை தொடர்ந்து, கனமழையால் பல விமான நிலையங்கள், முக்கிய நெடுஞ்சாலைகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மூடப்பட்டுள்ளன. ஆயிரக்கணக்கான மக்களை வெள்ள பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளிலிருந்து வெளியேற்றப்பட்டு வருகின்றனர். மேலும் கார்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளன. 25 ஆயிரத்திற்கும் அதிகமான குடியிருப்பு வீடுகள் பாதிப்படைந்துள்ளன. கடந்த 2019ஆம் ஆண்டில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் 70க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.