நடிகர் சிவகார்த்திகேயன் பாண்டிராஜின் “மெரினா” படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். நடிகராக அறிமுகமான அவர் தற்போது தயாரிப்பாளர், பாடகர், பாடலாசிரியர் என பல அவதாரம் எடுத்துள்ளார். இந்நிலையில் திரைக்கு வந்து 10 ஆண்டுகள் நிறைவு பெற்றதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் சிவகார்த்திகேயன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “இந்த தருணத்தில் தனக்கு முதல் வாய்ப்பினை வழங்கிய பாண்டிராஜ் மற்றும் அனைத்து தயாரிப்பாளர்களும் நன்றி.
என் படங்களில் பணியாற்றிய அத்தனை தொழிலாளர்கள் மற்றும் சக கலைஞர்களுக்கும் நன்றியை தெரிவித்து கொள்கின்றேன். மேலும் வெற்றி, தோல்வி எது வந்தாலும் என்னுடன் இருந்து கொண்டாடும் ரசிகர்களுக்கு மிகப்பெரிய நன்றிகள்” என்று அறிக்கையில் தெரிவித்துள்ளார். அதனை பார்த்த தனுஷ் ரசிகர்கள் அறிக்கையில் தனுஷுடைய பெயர் இல்லாததால் சிவகார்த்திகேயனை விளாசியுள்ளனர்.
ஏனென்றால் “எதிர் நீச்சல்” படம் ஹிட் ஆகவில்லை என்றால் சிவகார்த்திகேயன் பாலிவுட்டில் தாக்குப்பிடித்திருக்க முடியாது. இந்த வளர்ச்சிக்கு காரணமான தனுஷை மறந்துவிட்டீர்கள் என தனுஷ் ரசிகர்கள் விளாசியுள்ளனர். அதாவது தனுஷ் தான் தன்னுடைய வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் மூலம் எதிர்நீச்சல் படத்தை தயாரித்தார். ஆனால் மறு பக்கம் அந்த நிறுவனம் தயாரித்த படத்திலேயே முதல் ஹிட் கொடுத்தது எங்க சிவகார்த்திகேயன் அண்ணன் தான். எனவே சிவகார்த்திகேயனுக்கு தனுஷ் தான் நன்றி சொல்ல வேண்டும் என்று சிவகார்த்திகேயன் ரசிகர்கள் தனுஷ் ரசிகர்களுடன் மோதலில் நிற்கின்றனர்.