கடந்த வாரம் கொரோனா தொற்று பாதிப்பு ஆப்பிரிக்காவை தவிர மற்ற நாடுகளில் கணிசமாக அதிகரித்தது. அதாவது ஆப்பிரிக்காவில் கொரோனா தொற்று பாதிப்பு மூன்றில் ஒரு பங்காக குறைந்துள்ளது. தென்கிழக்கு ஆசியாவில் அதற்கு மாறாக கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. மேலும் உலக அளவில் உயிரிழப்பு எண்ணிக்கை 45 ஆயிரமாக பதிவாகியுள்ளது.
அதேபோல் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 145 சதவீதமாக அதிகரித்துள்ளது. மேலும் மத்திய கிழக்கு நாடுகளில் கொரோனா பாதிப்பு 68 சதவீதமாக உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. ஐரோப்பிய நாடுகளில் 10 சதவீதமாகவும், அமெரிக்க நாடுகளில் 17 சதவீதமாகவும் கொரோனா பாதிப்பு உயர்ந்துள்ளது.