Categories
உலக செய்திகள்

அடக்கடவுளே…! இனி ஆட்டம் ஆரம்பம்…. என்ன செய்யப்போகிறார் கிம் ஜாங் உன்…? அத்துமீறி நுழைந்த தென்கொரியர்….!!

தென்கொரிய இராணுவத்திடமிருந்து தப்பிய நபரொருவர் புத்தாண்டன்று கண்காணிப்பு கருவிகளுடன் மிக கடுமையான கொரோனா கட்டுப்பாடுகள் அமலில் இருந்தும்கூட வடகொரியாவின் எல்லைக்குள் நுழைந்ததாக அந்நாடு தெரிவித்துள்ளது.

தென்கொரியாவின் கிழக்கு பகுதியில் அடையாளம் தெரியாத நபரொருவர் கண்காணிப்பு கருவிகளுடன் நுழைந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த தென்கொரிய ராணுவத்தினர்கள் அந்த அடையாளம் தெரியாத நபரை துரத்தி சென்றுள்ளார்கள்.

ஆனால் அந்த அடையாளம் தெரியாத நபர் மிகக் கடுமையான கொரோனா கட்டுப்பாடுகள் அமலில் இருந்தும் கூட வடகொரியாவின் எல்லைக்குள் நுழைந்துள்ளார். இந்த சம்பவத்தை தென்கொரிய ராணுவம் உறுதிசெய்துள்ளது.

இந்நிலையில் தென்கொரிய ராணுவம் அந்த அடையாளம் தெரியாத நபரின் பாதுகாப்பு தொடர்பாக அந்நாடு விளக்கமளிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது. இருப்பினும் வடகொரியா தரப்பிலிருந்து தற்போது வரை எந்தவித தகவலும் வரவில்லை என்றே கூறப்படுகிறது.

இதற்கு முன்னதாக கடந்த 2020 ஆம் ஆண்டு எல்லையை தாண்டிய குற்றத்திற்காக தென்கொரியாவின் மீன்வளத்துறை அதிகாரி வடகொரியாவில் சுட்டு கொல்லப்பட்ட சம்பவம் நினைவுகூரத்தக்கது.

Categories

Tech |