Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

அடக்கடவுளே இப்படியுமா பண்ணுவாங்க!!… குழு பணத்தை கையாடல் செய்த வாலிபர்…. போலீசாரின் அதிரடி நடவடிக்கை …. !!!

சுய உதவிக்குழு பெண்களிடம் 4 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் பணம் கையாடல் செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

திருவாரூர் மாவட்டத்திலுள்ள சேரன்குளம் கிராமத்தில் முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விஜயராகவன் என்ற மகன் உள்ளார்.  இவர் மன்னார்குடியில் அமைந்துள்ள  தனியார் நிதி நிறுவனத்தில் சுய உதவி குழுக்கள் மூலம் கடன் பெற்றவர்களிடம் பணம் வசூலிக்கும் பணி செய்து வந்துள்ளார். இவர் சுய உதவிக் குழுக்கள் மூலம்  கடன் பெற்ற பெண்களிடம் வசூலித்த பணத்தை பாதியை நிறுவனத்தில் கட்டி விட்டு மீதி பணத்தை கையாடல் செய்துள்ளார்.

இந்நிலையில் நிதி நிர்வாகம் கணக்குகளை சரிபார்த்து உள்ளது. அப்போது விஜயராகவன் 133 பெண்களிடம் இருந்து 4 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் பணத்தை கையாடல் செய்தது தெரியவந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த நிதி நிறுவன மேலாளர் தினேசன் திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விஜயராகவனை  கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |