கால்வாய்க்குள் விழுந்த ஜே.சி.பி. இயந்திரத்தை நீண்ட நேரம் போராடி மீட்டுள்ளனர்.
கர்நாடக மாநிலத்தில் உள்ள ராஜாஜி நகரில் மாநகராட்சிக்கு சொந்தமான மைதானம் ஒன்று உள்ளது. இந்த மைதானத்தை சீரமைக்கும் பணி கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று காலை ஜே.சி.பி. எந்திரம் மூலம் மைதானத்தை சுத்தப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டது. அப்போது மைதானத்தில் உள்ள கால்வாய் மீது ஜே.சி.பி. இயந்திரம் ஏறி நின்றுள்ளது.
இந்நிலையில் பாரம் தாங்காமல் கான்கிரீட் தளம் இடிந்து ஜே.சி.பி. எந்திரம் கால்வாய்க்குள் விழுந்துள்ளது. இதில் இயந்திரத்தின் கண்ணாடி நொறுங்கியுள்ளது. மேலும் ஓட்டுநருக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து நீண்ட போராட்டத்திற்கு பின்னர் கால்வாயில் சிக்கிய ஜே. சி. பி. இயந்திரத்தை அப்பகுதி மக்கள் மீட்டுள்ளனர்.