Categories
தேசிய செய்திகள்

அடக்கடவுளே!…. இப்படி ஒரு கொடூரமா?…. சிறுநீரை குடிக்க வைத்த அவலம்…. பெரும் பரபரப்பு….!!!!

மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள குவாலியர் மாவட்டத்தில் தலித் சமூகத்தைச் சேர்ந்த சசிகாந்த் ஜாதவ் (வயது 33) என்பவர் வசித்து வருகிறார். இவர் தகவலறியும் உரிமை சட்டத்தின் கீழ் பாரிஹி கிராம பஞ்சாயத்தின் விவரங்களை கோரியுள்ளார். இந்த நிலையில் கடந்த 23-ஆம் தேதியன்று பஞ்சாயத்து தலைவரின் கணவர், செயலர் ஆகியோர் சசிகாந்த் ஜாதவை அலுவலகத்திற்கு அழைத்துள்ளனர். அதன் பிறகு ஜாதவை அறையில் கட்டிவைத்து தாக்கியுள்ளனர்.

மேலும் தங்களுடைய காலனியில் சிறுநீரை ஊற்றி அதனை ஜாதவிற்கு குடிக்க கொடுத்துள்ளனர். இதனால் பலத்த காயமடைந்த ஜாதவ் இதுகுறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மேலும் மேல்சிகிச்சைக்காக சசிகாந்த் ஜாதவ் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |